இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ளது. ஜூலை 18ஆம் தேதி வாக்கெடுப்புக்குப் பிறகு, நமது நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது ஜூலை 21ம் தேதி தெரிந்துவிடும். புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இந்திய குடியரசு தலைவர் கிடைக்கும், அதிகாரங்கள், சம்பளம் வசதிகள் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் முதல் குடிமகனின் அதிகாரங்கள் 


குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகனாகக் கருதப்படுகிறார். இந்திய குடியரசுத் தலைவர் மூன்று பாதுகாப்பு சேவைகளான, இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் உச்ச தளபதியும் ஆவார். குடியரசுத் தலைவர்  நாட்டின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவ்வளவு முக்கியமான ஆளுமையாக இருக்கும் குடியரசுத் தலைவருக்கு  பல வசதிகள் கிடைக்கின்றன. நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதைத் தவிர வேறு என்னென்ன வசதிகள், சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கும்? இதைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலைத் தெரிந்து கொள்ளலாம். 


இந்திய குடியரசுத் தலைவர்   வசிக்கும் இடம் 


தில்லியில், ரைசினா ஹில்ஸில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய குடியரசுத் தலைவர் வசிக்கிறார். ராஷ்டிரபதி பவனின் 4 மாடி கட்டிடத்தில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. சுமார் 2.5 கிமீ நீளமுள்ள ஒரு நடைபாதையும், 190 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய தோட்டமும் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த  கட்டிடத்தில் பல பெரிய அரங்குகள், விருந்தினர் அறைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. 


மேலும் படிக்க | குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்


குடியரசுத் தலைவரின் சம்பளம்


நாட்டின் குடியரசுத் தலைவருக்கு பணியில் உதவ ஐந்து பேர் கொண்ட செயலக ஊழியர்கள் உள்ளனர். இது தவிர, 200 பேர் ராஷ்டிரபதி பவனின் மேற்பார்வையில் தங்கள் பணியை  மேற்கொள்கிறார்கள். இந்திய குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் உலகில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம். குடியரசுத் தலைவர் தங்குவதற்கும், அவரது பணியாளர்கள் தங்குவதற்கும், விருந்தினர்களை வரவேற்பதற்கும் இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2.25 கோடி செலவிடுகிறது. குடியரசுத் தலைவருக்கு மாதாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் சம்பளம்.  அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், வீடு மற்றும் சிகிச்சை வசதிகளும் கிடைக்கும். 


குடியரசுத் தலைவர் பயன்படுத்தும் வாகனம்,  விடுமுறை, ஓய்வு விபரங்கள்


கருப்பு நிற Mercedes Benz S600 (W221) புல்மேன் கார்டில் இந்திய குடியரசுத் தலைவர் சவாரி செய்கிறார். இது தவிர, அதிகார பூர்வ பயணங்களுக்கு அவர் நீண்ட கவச வாகனமான லிமோசீன் வாகனத்தில் பயனிக்கலாம். குடியரசுத் தலைவருக்கு விடுமுறையைக் கழிக்க இரண்டு சிறப்பு இடங்கள் உள்ளன. அதில் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம், மற்றொன்று சிம்லாவில் அமைந்துள்ள ரிட்ரீட் கட்டிடம். அவர் குடும்பத்துடன் எங்கு சென்று தங்கலாம். 


மேலும் படிக்க | Presidential Election 2022: இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ