ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சிக்கு ஜனாதிபதி ஒப்புதல்!
ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பேரில் ஆளுநரின் ஆட்சி அமலுக்கு வந்தது!
ஜம்மு - காஷ்மீரில் பாஜக தனது ஆதரவை விலக்கியதால் முதலமைச்சர் பதவியில் இருந்து மெஹபூபா முப்தி நேற்று ராஜினாமா செய்ததார். இதையடுத்து, அங்கு தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பேரில் ஆளுநரின் ஆட்சி அமலுக்கு வந்தது.
முன்னதாக, மறைந்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மரணத்திற்கு பிறகு மாநிலத்தில் பி.டி.பி. மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பா.ஜ.க-வுடனான கூட்டணி எனது தந்தை முப்தி முகமது சயீதின் விருப்பத்தில் அமைந்தது என அவரது மகள் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பி.டி.பி. - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து வந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க நேற்று(ஜூன் 19) வாபஸ்பெற்றது.
இதனையடுத்து முதல்வர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.