புதுடில்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பண்ணை மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27, 2020) ஒப்புதல் அளித்தார். பல மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கெஸெட் அறிவிப்பின்படி, உழவர் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை தனது ஒப்புதலை அளித்தார்.


நாடாளுமன்றத்தில் (Parliament) இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதத்தால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கிடையில் இவற்றிற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வந்துள்ளது.


மேலும், இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து, இந்த மூன்று வேளான் மசோதாக்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


இதற்கிடையில், ஷிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல் (Sukhbir Singh Badal) இதை இந்தியாவுக்கு ஒரு இருண்ட நாள் என்று கூறியுள்ளார். "இந்தியாவின் மனசாட்சியாக செயல்பட குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டதால் உண்மையில் இந்தியாவுக்கு இது ஒரு இருண்ட நாள். SAD மற்றும் வேறு சில எதிர்க்கட்சிகள் கோரியபடி மறுபரிசீலனை செய்வதற்காக இந்த மசோதாக்களை அவர் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்புவார் என்று நாங்கள் மிகவும் நம்பினோம்" என்று அவர் ANI இடம் கூறினார்.


இந்த மசோதாக்கள் தொடர்பான பிரச்சனையால், தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) மிகப் பழமையான கூட்டாளிக் கட்சியான ஷிரோமணி அகாலிதளம் (SAD) ஆளும் கட்சியிலிருந்து பிரிந்துள்ளது.


ALSO READ: விவசாய மசோதா விவகாரத்தில் தொடர்பாக NDAவில் இருந்து விலகியது சிரோமணி அகாலி தளம்


பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகள் வேளான் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.  விவசாயிகளின் அச்சங்களைத் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முயன்றார். வேளான் மசோதாக்களைக் குறிக்கும் வகையில், நாட்டின் விவசாயத் துறை சமீபத்தில் தன்னைத் தானே புதுப்பித்து வலுப்படுத்திக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். "ஆத்மநிர்பர் பாரத்”, அதாவது தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விவசாயிகளும் வேளான் துறையும் வலுவாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டார்.


"மிகப் பெரிய புயல்களின் போது கூட நம் மண்ணோடு திடமாக இருப்பவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். கொரோனாவின் இந்த கடினமான காலங்களில், நமது வேளான் துறை, நமது விவசாயிகள் இதற்கு ஒரு வாழும் உதாரணமாக இருந்துள்ளார்கள். இந்த நெருக்கடியின் போது கூட, நமது விவசாயத் துறை மீண்டும் அதன் வலிமையைக் காட்டியுள்ளது. நமது விவசாயிகள், வேளான் துறை, கிராமங்கள், இவை அனைத்தும் தற்சார்பு இந்தியாவின் அடித்தளமாகும். இவை வலுவாக இருந்தால், `ஆத்மநிர்பர் பாரதத்தின்’ அடித்தளம் வலுவாக இருக்கும்” என்றார் பிரதமர்.


உழவர் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020 பல்வேறு மாநில சட்டங்களால் அமைக்கப்பட்ட வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களால் (APMC) கட்டுப்படுத்தப்படும் சந்தைகளுக்கு வெளியே விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


விலை உத்திரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, 2020 இன் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஒப்பந்த விவசாயத்திற்கு வழி வகுக்கிறது.


அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சமையல் எண்ணெய் வித்து போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் ஆகியவற்றைக் ஒழுங்குபடுத்துகிறது.


ALSO READ: வேளான் மசோதா: திருச்சி மற்றும் தாம்பரத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR