3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை துவங்கினார் குடியரசு தலைவர்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 8 நாள் சுற்றுப்பயணமாக சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டார்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 8 நாள் சுற்றுப்பயணமாக சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டார்!
சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இந்நிலையில் இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பொருளாதார அடிப்படையிலான விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடுத்துகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயண திட்டத்தின் படி செப்டம்பர் 2 முதல் 4 வரை சைப்ரஸ் நாட்டிற்கு செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் நிகோசை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பின்னர் செப்டம்பர் 4 முதல் 6 வரை பல்கேரியா செல்கிறார். இதைத்தொடர்ந்து அவர் செக் குடியரசில் தனது சுற்று பயணத்தினை நிறைவு செய்கிறார். அங்கு வர்த்தக கூட்டம் ஒன்றிலும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
இந்த மூன்று நாடுகளின் சுற்று பயணத்தின் போது வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தைகள் முக்கிய இடம்பெறும் என குடியரசு தலைவரின் பத்திரிகை செயலாளர் அசோக் மாலிக் தெரிவித்துள்ளார்.