நாட்டை பாதுகாக்க கார்கில் போரில் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இந்நாளில் தலைவணங்குவோம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்து இந்திய பகுதியை கைப்பற்றியது. இந்தப் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. 


கார்கில் வெற்றி தினத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நினைவு கூர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "1999ம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற கார்கில் போரில் நாட்டை பாதுகாக்க தன்னுயிரை நீத்தவர்களுக்கு இந்நாளில் தலைவணங்குவோம். அவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை இந்நாடு என்றும் நினைவு கூறும். அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும் தலை வணங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.  



கார்கில் போர் வெற்றியின் 20வது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் பகுதியில் டிராஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொள்கின்றனர். மேலும் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.