அரசு முறைப் பயணமாக 3 நாடுகளுக்கு செல்லும் குடியரசுத்தலைவர்!
அரசு முறைப் பயணமாக மூன்று நாடுகளுக்கு செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டார்!
அரசு முறைப் பயணமாக மூன்று நாடுகளுக்கு செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டார்!
இந்த பயணத்தில் அவர் கிரீஸ், சுரிநேம் மற்றும் கியூபா நாடுகளுக்குச் செல்லவிருக்கின்றார். குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் அந்நாட்டின் குடியரசுத் தலைவர்களைச் சந்திக்கிறார்.
இன்று இந்தியாவில் இருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் முதல் கட்டமாக கிரீஸின் ஏதென்சுக்கும், பின்னர் வரும் செவ்வாய் அன்று சுரிநேமுக்கும், 21-ஆம் நாள் கியூபாவிற்கும் செல்கின்றார். 9 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் இந்தியாவிற்கு அடுத்தவாரம் திரும்புகின்றார்.
இந்த பயணத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் அவருடைய மனைவி சவிதா கோவிந்த், உருக்குத்துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தில் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், ஆயுர்வேதம், உயிரி தொழில்நுட்பம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவம், மூலிகைகள் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.