புதிய நாடாராளுமன்றத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்: ராகுல் காந்தி
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டத்தை மே 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார். இந்த வார தொடக்கத்தில், காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம் பிரதமர் மோடியின் தற்பெருமையை பறைசாற்றும் திட்டம் என்று கூறினார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடந்து வரும் பணிகளை பிரதமர் ஆய்வு செய்யும் சமீபத்திய படத்தைப் பகிர்ந்து கொண்ட ஜெய்ராம் ரமேஷ், "புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரே கட்டட வடிவமைப்பாளர், வடிவமைப்பாளர் மற்றும் தொழிலாளியான இவர் தான் மே 28 அன்று திறந்து வைக்கிறார். படம் அனைத்தையும் சொல்கிறது - தற்பெருமையை பறைசாற்றும் திட்டம்."
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வியாழக்கிழமை அவரை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பை விடுத்ததாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 10, 2020 அன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 1927ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தற்போது 96 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல ஆண்டுகளாக, பயன்படுத்தப்படும் பழைய கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் அமரலாம். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் போது, மக்களவையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் அமரலாம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்
டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், கூட்டங்களுக்கான பல அறைகள், உணவருந்தும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை இருக்கும். முக்கோண வடிவிலான நான்கு மாடி கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மூன்று முக்கிய வாயில்கள் உள்ளன -- கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார். விஐபிக்கள், எம்பிக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனி நுழைவாயில் இருக்கும்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று திறந்து வைப்பார்!
2020 டிசம்பரில் தொடங்கிய பணி
புதிய இந்திய நாடாளுமன்றம்: சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் அடிக்கல் 2020 டிசம்பர் 10 அன்று கொரோனா காலத்தில் நாட்டப்பட்டது. அதன் பிறகு, 2021 ஜனவரி 15 அன்று கட்டுமானம் தொடங்கியது. இதன் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு 2022 நவம்பரில் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் 5 மாதங்கள் தாமதமாக முடிவடைகிறது.
நவீன பாதுகாப்பு அம்சங்கள்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நவீன வளங்கள் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பட்ட அமைப்பு காரணமாக, ஹெடெக் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கஃபே மற்றும் டைனிங் ஏரியாவும் இதில் ஹைடெக் ஆக்கப்படுகிறது. இது தவிர, பல்வேறு சந்திப்பு அறைகளிலும் மிகவும் மேம்பட்ட உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய பொதுவான அறைகள், பெண்கள் ஓய்வறை மற்றும் விஐபி லவுஞ்ச் ஆகியவையும் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ