இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது தரப்பில் திரவுபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஓட்டுசீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு 'பிங்க்' நிற வாக்குச் சீட்டும் தரப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 4,800 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்று (ஜூலை 18) வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. மேலும், மாநில சட்ட பேரவைகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் பதிவு செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 63-ல் 6 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலக வளாகத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து வாக்களிக் கின்றனர். அவர்களின் வருகைக்காக தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது


தமிழகத்தில் நடக்கும் வாக் குப்பதிவுக்கான ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள குழு கூட்ட அறையில், மறைவு அமைக்கப் பட்டுள்ள மேஜை மீது ஓட்டுப் பெட்டிவைக்கப்பட்டு இருக்கும். அங்கு வாக்குச் சீட்டு தரப்படும். தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த புவனேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்


வாக்குப்பதிவுக்கு பிறகு அது சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் விமான சென்னை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். விமானத்தில் தனி சீட்டில் வைக்கப் பட்டு, துப்பாக்கி எந்திய பாது காவலரின் காவலுடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண் ணிக்கை வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது முடிவுகள் அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க | Presidential Election 2022: இதுவரை எத்தனை கட்சிகள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ