நலம் பெறுங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரே - முதலமைச்சரின் ட்விஸ்ட் ட்வீட்

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நலம் பெற வேண்டுமென்று முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 16, 2022, 03:01 PM IST
  • ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரானார் பழனிசாமி
  • பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிகள் ஓபிஎஸ்ஸிடமிருந்து பறிப்பு
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது
 நலம் பெறுங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரே - முதலமைச்சரின் ட்விஸ்ட் ட்வீட் title=

அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்த சூழலில் எடப்பாடி பழனிசாமி ஒருவழியாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இதனையடுத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஆனால், தன்னை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் உரிமையில்லை என கூறி எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

Edappadi palanisamy, O Panneerselvam

இதற்கிடையே அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ்ஸின் மகனும், அதிமுகவின் ஒரே எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் எம்.பி எண்ணிக்கை பூஜ்ஜியமானது.

மேலும் படிக்க | ராஜபக்சேவின் நிலைமைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் - ஆருடம் கூறும் தினகரன்

இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது குறித்து எங்களுக்கு இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாதொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறிவரும் சூழலில், முதலமைச்சர் ஸ்டாலினோ ஓபிஎஸ்ஸை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றும் குறிப்பிட்டு ட்வீட் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Annamalai

அதேசமயம் அண்ணாமலை செய்துள்ள ட்வீட்டில், முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன்.  அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கும் சூழலில் அண்ணாமலையோ ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறார். இதனால் ஓபிஎஸ் விவகாரத்திலும், அதிமுகவுக்குள்ளும் என்னதான் நடக்கிறது என பலர் குழப்பமடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | அதிமுக தலைமைக் கழக வழக்கு - திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

அதுமட்டுமின்றி, தங்களுக்குள் நடக்கும் நீக்குதல் விளையாட்டை ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே நிறுத்திவிட்டு கட்சியை கவனிக்க வேண்டுமென்றும் அதிமுக தொண்டர்களிடம் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News