ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி மீரா குமாரை விட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் நிலையம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்றது.


இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூலை 20) எண்ணப்பட்டு. மேலும் இதற்க்கான முடிவு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. 99% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.


ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற ஓட்டுப்பதிவு பார்லிமென்ட் வளாகம் மற்றும் மாநில சட்டசபைகளில் நடந்த தேர்தலில், லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர். மொத்தம், 99% ஓட்டுகள் பதிவாகின. 


இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும், பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள், டில்லியில் இன்று எண்ணப்படுகின்றன. 


முதல் கட்டமாக பார்லிமென்ட் வளாகத்தில் பதிவான ஓட்டுகளும், அதைத் தொடர்ந்து மாநில சட்டசபைகளில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன. 


இந்த ஓட்டு எண்ணிகை இன்று காலை 11 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. நான்கு மேஜைகளில், எட்டு சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு, நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது, மாலை, 5 
மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.


புதிய ஜனாதிபதி யார் என்பது, இன்று மாலைக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.