தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி. 


பாராதிய ஜனதா கட்சி சார்பில், பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.எனவே புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பாஜக விரும்பியது. ஆனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிடுவார் என நேற்று சோனியா காந்தி அறிவித்தார். 


இந்நிலையில், பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இல்லத்தில், தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


இன்னும் சில நாட்களில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.