ஃபேல் போர் விமானத்தின் விலை விவரத்தை தேசிய ரகசியமென பா.ஜ.க. கருதுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 


இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம் கூறவும், இந்த குற்றத்திற்கு பாஜக கட்சியினர் பதில் கொடுக்கவும் என வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ரஃபேல் போர் விமானம் குறித்து பிரதமர் மோடிக்கும், அனில் அம்பானிக்கும் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. பிரான்சின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்களான ஹாலண்டே, மேக்ரான், பத்திரிக்கையாளர்கள், டசால்ட் நிறுவனத்தினர், அந்நிறுவனத்தின் போட்டியாளர்கள் என அனைவருக்கும் ரஃபேல் போர் விமானத்தின் விலை தெரியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.



ஆனால் மோடி அரசு ரஃபேல் போர் விமான விலையை தேசிய ரகசியமாக கருதுவதாகவும், அதை உச்சநீதிமன்றத்துக்குக் கூட தெரிவிக்கவில்லை என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.