தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் ஆசை, நாட்டு மக்களை காப்பது அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்ச கட்டம் எட்டியுள்ளது. பாகிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தன் இந்தியாவிற்கு பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று இந்திய மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று உலகிலேயே மிகப்பெரிய அளவில் காணொலி காட்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.


கோடிக்கணக்கான தொண்டர்கள், ஆர்வலர்கள், உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் திட்டமிட்டப்படி காணொலி காட்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. 


இதனால் கடும் விமர்சனத்திற்கு இந்த மாநாடு ஆளாகியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்து கேஜ்ரிவால் ஆகியோர் இதுகுறித்து தெரிவிக்கையில்...


ராகுல்காந்தி - "தவறான முன்னுரிமை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் உள்ள இந்திய வீரர் அபிநந்தன் பத்திரமாகவும், உடனடியாகவும் திரும்ப வேண்டும் என்று 132 கோடி இந்திய மக்களும் பிரார்த்தனை செய்துவருகிறார்கள். மோடியின் மொத்த ஆசையும் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும். காங்கிரஸ் கட்சி  செயற்குழுக் கூட்டம் மற்றும் பேரணியை ஒத்திவைத்துவிட்டது. ஆனால் பிரதான சேவகரோ காணொலி காட்சி சாதனையை செய்து கொண்டு இருக்கிறார்." என விமர்சித்துள்ளார்.


அரவிந்து கேஜ்ரிவால் - "இது மிகவும் வருத்தமாக உள்ளது. முழு நாடும் நிலத்தை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் நீங்கள் சாவடிகளை வலுப்படுத்தத் தயாராக இருக்கிறீர். நாட்டு மக்களின் நலன் அறிந்து செயல்படுவதே ஒரு நல்ல தலைவருக்கான தகுதி. அபிநந்தன் மீது ஆர்வம் காட்டுங்கள்;வீடியோ கான்பிரன்ஸை ஒத்திவையுங்கள்" என கடுமையாக சாடியுள்ளார்.