சிங்கபூரில் அறிமுகமானது, இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்!
இந்தியாவின் மூன்று பண பரிவர்த்தனை மொபைல் செயலிகளை சிங்கபூரில் அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி!
இந்தியாவின் மூன்று பண பரிவர்த்தனை மொபைல் செயலிகளை சிங்கபூரில் அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி!
சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை நேற்று பார்வையிட்ட இந்திய பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் மூன்று பண பரிவர்த்தனை செயலிகளான BHIM, RuPay மற்றும் SBI செயலிகளை அறிமுகம் செய்தார்.
தெற்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 25-ஆம் நாள் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக இன்று சிங்கப்பூர் சென்றுள்ள அவர் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசிய அவர் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மலேசியாவை அடுத்து சிங்கப்பூர் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை வரவேற்று இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பயணத்தின் ஒரு பகுதியாக மாலை, சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். இதனையடுத்து தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரதமரை வரவேற்கும் விதமாக இந்திய கலாச்சார நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும், எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.