ஒடிசாவின் தல்சேரில் ₹13,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய உரக் கழகத்தால் நடத்தப்பட்டு வந்த தல்சேர் உரத் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் கடந்த 2002-ஆம் ஆண்டு மூடப்பட்டது. செயலிழந்து கிடந்த இந்த தொழிற்சாலையினை புதுப்பிப்பது என 2011-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தல்சேர் உரத் தொழிற்சாலையை ₹13,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்.... "இந்தியாவிலேயே நிலக்கரியில் இருந்து வாயு தயாரித்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தும் முதல் உரத் தொழிற்சாலையாக, தல்சேர் உரத்தொழிற்சாலை அமையும். இந்த தொழிற்சாலை இயற்கை எரிவாயுவையும் தயாரிக்கும் வல்லமை படைத்தது என்பதால், நாட்டின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்வதிலும் பங்களிக்கும் என நம்புகின்றேன். 


இப்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தல்சேர் உரத் தொழிற்சாலையில் அடுத்த 36 மாதங்களில் உற்பத்தி தொடங்கும். உற்பத்தியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்ப்பேன்" என தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், ஜார்சுகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தையும் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கிவைத்தார்.