பிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் கல்தா? ஸ்மிருதி இரானி முதல் அனுராக் தாக்கூர் வரை
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் மீண்டும் பொறுபேற்க இருக்கும் நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக எம்பிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். அதில், பாஜகவின் மூத்த தலைவர்களான நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் இம்முறையும் அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறார். நீலகிரி தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவிடம் அவர் தோல்வியை தழுவியிருந்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரும் பிரதமர் நரேந்திர மோடியின் தேநீர் விருந்தில் பங்கேற்றார்.
மேலும் படிக்க | மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அண்ணாமலை? இன்று பதவியேற்கிறார்?
ஆனால், ஸ்மிருதி இராணி, அனுராக் தாக்கூர் ஆகியோர் இந்த தேநீர் விருந்தில் இல்லை. அவர்கள் இருவரும் கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்த நிலையில், இருவரும் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஸ்மிருதி இராணி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரி லால் சர்மாவிடம் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார். கடந்த முறை இந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டார். அவரை தோற்கடித்ததால் மோடி 2.0 ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்த நிலையில், அமேதியில் இம்முறை தோல்வியை தழுவி, அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற ஜிதின் பிரசாத், ரவ்னீத் பிட்டு, ராவ் இந்தர்ஜித் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அமைச்சரவையில் இடம்பெறுவதாக தகவல் பரவியது. அவர் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய அமைச்சராக பதவியேற்க இருப்பதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் பரவியது. அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களே இந்த தகவலையும் பரப்பினர்.
இருப்பினும், அந்த தகவலில் உண்மையில்லை என்று உறுதியானது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் தேசிய தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், அதனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி இறுதியில் நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் இதுகுறித்து பேசும்போது, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து எந்த பரிசீலனையும் நடைபெறவில்லை, அண்ணாமலை ஆதரவாளர்களே வெறும் சோஷியல் மீடியா அட்டென்ஷனுக்காக பரப்பிவிட்ட தகவல் இது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ