மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?

PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்  பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2024, 03:15 PM IST
  • அமைச்சரவையில் 78 முதல் 81 பேர் வரை இருக்க வாய்ப்பு
  • இன்று இதில் பெரும்பாலானோர் பதவியேற்க வாய்ப்பு
  • தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை அமைச்சரவையில் இல்லை என தகவல்
மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...? title=

PM Modi Cabinet: விடுதலைக்கு பின்னான இந்திய அரசியல் வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை நரேந்திர மோடி இன்று பெற்றுள்ளார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று இரவு நடைபெறும் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். 

இதில் பிரதமர் மோடியுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்களும் பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும் எத்தனை பேர் பிரதமர் மோடியுடன் பதவியேற்க உள்ளனர், அதில் யார் யார் பாஜகவை சேர்ந்தவர்கள், எத்தனை பேர் கூட்டணி கட்சியினர் என்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை. 

பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து...

ஆனால், மோடியின் இந்த அமைச்சரவையில் இடம்பிடிக்க உள்ளவர்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் பாஜக உறுப்பினர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களே பெரும்பாலும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறலாம். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவிவந்த நிலையில், அதனை அவர் தற்போது மறுத்துள்ளார்.

மீண்டும் எல்.முருகன்...

அமைச்சரவையில் தான் இடம்பிடிக்கவில்லை என்றும் தமிழக பாஜக மாநில தலைவராகவே தொடர இருப்பதாகவும் அவர் தற்போது தகவல் அளித்துள்ளார். மேலும், டெல்லியில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மட்டுமே பங்கேற்றிருந்தார். இதனால், மீண்டும் அவர் அமைச்சரவையில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பில்லை எனலாம்.

மேலும் படிக்க | மோடி அமைச்சரவையில் டாப் பணக்கார எம்.பி... சந்திரசேகர் பெம்மசானி சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

மாநில வாரியாக...

தொடர்ந்து, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய் ஷங்கர் உள்ளிட்டோர் மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க உள்ளனர். மேலும் பல புது முகங்களும் இடம்பெற்றிருக்கின்றனர். மத்திய அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் என மொத்தம் 78 முதல் 81 உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மோடியின் தற்போதைய அமைச்சரவையில் இடம்பிடிக்க உள்ளவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார் அமைச்சரவையில் பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்பதை இங்கு காணலாம். 

தமிழ்நாடு: எல். முருகன், நிர்மலா சீதாராமன்

கேரளா: சுரேஷ் கோபி

கர்நாடகா: ஷோபா கரந்த்லாஜே, ஹெச்.டி. குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி

ஆந்திர பிரதேசம்: சந்திரசேகர் பெம்மசானி, ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு

தெலுங்கானா: ஜி கிஷன் ரெட்டி, பாண்டி சஞ்சய் 

மகாராஷ்டிரா: நிதின் கட்கரி, ரக்ஷா கட்சே, பிரதாப்ராவ் ஜாதவ், பியூஷ் கோயல், முரளிதர் மோகன், ராம்தாஸ் அத்வாலே

குஜராத்: அமித் ஷா, சிஆர் பாட்டீல் மற்றும் மன்சுக் மாண்டவியா

பீகார்: ஜிதன் ராம் மஞ்சி, ராம் நாத் தாக்கூர், நித்யானந்த் ராய், கிரிராஜ் சிங் மற்றும் சிராக் பாஸ்வான்

ஜார்க்கண்ட்: அன்னபூர்ணா தேவி, சந்திர பிரகாஷ்

உத்தர பிரதேசம்: ராஜ்நாத் சிங், ஜிதின் பிரசாத், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா படேல், ஜெயந்த் சவுத்ரி,
பிஎல் வர்மா

மத்திய பிரதேசம்: சிவராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சாவித்ரி தாக்கூர்

ராஜஸ்தான்: அஷ்வினி வைஷ்ணவ், கஜேந்திர ஷெகாவத், பகீரத் சவுத்ரி, அர்ஜுன் ராம் மேக்வால் 

ஹிமாச்சல பிரதேசம்: ஜேபி நட்டா

பஞ்சாப்: ரவ்னீத் சிக்பிட்டு

ஹரியானா: கிருஷ்ணபால் குர்ஜார், ராவ் இந்திரஜித் சிங், மனோகர் லால் கட்டார்

மேற்கு வங்கம்: சாந்தனு தாக்கூர்

டெல்லி: ஹர்ஷ் மல்ஹோத்ரா

அசாம்: சர்பானந்தா சோனோசல்

அருணாச்சல பிரதேசம்: கிரண் ரிஜிஜு

உத்தரகாண்ட்: அஜய் தம்தா

மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் வெளியான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இதில் மாற்றங்களும் இருக்கலாம் என்பதை வாசகர்கள் மனதில் கொள்ளவும். 

மேலும் படிக்க | இரண்டு முறைக்கு மேல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News