உத்தரபிரதேச மாநிலம் பால்லியாவில் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னோக்கி அழைத்து செல்வதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலுக்கான ஏழாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் மே 19 தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சார கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் ஆரவாரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் இன்று உத்திரபிரதேச மாநிலம் பால்வியாவில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்., நாட்டு மக்களை கொள்ளையடித்து பிரதமர் ஆக வேண்டும் என்று தான் ஒருபோதும் கனவு கண்டது இல்லை எனவும், தான் இளமைப்பருவத்தில் ஏழையாக இருந்தபோது அனுபவித்திராத எல்லா வசதிகளையும் வழங்குவதற்கு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யத்தான் விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் தனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ, வணிக வளாகம் உள்ளது என்றோ, வெளிநாடுகளில் என் பெயரில் சொத்து உள்ளது என்றோ, சொகுசு கார் உள்ளது என்றோ எதிர்கட்சி தலைவர்களால் நிரூபித்து காட்ட முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் தன்னிடம் உள்ள ஒரே சாதி வறுமைதான் எனவும், அதனை ஒழிக்கவே வறுமைக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வருகிறேன் எனவும் குறிப்பிட்டு பேசினார்.


தான் எத்தனையோ தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறேன் என தெரிவித்த மோடி, இதுவரை தனது சாதியின் ஆதரவை கேட்டுப் பெற்றதில்லை எனவும் குறிப்பிட்டு பேசினார். மேலும் தனது நோக்கம், இந்தியாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதுதான் என்றும் மக்களின் முன்னிலையில் தெரிவித்தார்.