கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. யேசுபிரான் பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். வீடுகளில் வண்ண அலங்கார குடில்கள் அமைத்தும் புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.


உலகின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து பங்கேற்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,


இயேசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவில் கொள்கிறோம். அவரது கோட்பாடுகள், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு.


 



 


என பதிவிட்டுள்ளார்.