ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.


 



 


இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 


நினைவகத்தின் முகப்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 6 அடி உயர முழு உருவ வெண்கல சிலை, 'அக்னி' ஏவுகணை, செயற்கைகோள் மாதிரிகள், கலாமின் 700க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 95 ஓவியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


இந்நிலையில் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று இந்த மணிமண்டபத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


 



 


தொடர்ந்து நினைவகத்தை பிரதமர் மோடி சுற்றி பார்த்தார். தொடர்ந்து, கலாம் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலாம் குடும்பத்தினரையும் சந்தித்தார்.


 



 


விழாவில், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்ராதாகிருஷ்ணன், பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை பங்கேற்றனர்.