சீருடையை மதிக்கவும்; மன அழுத்தத்தை வெல்ல யோகா செய்யவும்: IPS அதிகாரிகளிடம் PM மோடி
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரென்சிங் மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் உரையாடினார்.
ஹதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4, 2020) பயிற்சியை முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரென்சிங் மூலம் உரையாடினார். அப்போது அவர், அவர்கள் தங்களின் வேலையையும், சீருடையையும் மதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள், தங்கள் சீருடையில் சக்தியை காண்பிப்பதற்கு பதிலாக அதனை நினைத்து பெருமைப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி கூறினார்.
“உங்கள் காக்கி சீருடையை எப்போதும் மதிக்க வேண்டும். இந்த COVID-19 இன் போது காவல்துறையினர் செய்த அர்பணிப்புடன் கூடிய பணி என்றென்றூம் நினைவில் கொள்ளப்படும் என பிரதம மோடி கூறினார்.
தனது உரையின் போது, அகாடமியில் இருந்து வெளியேறிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்புகொள்கிறேன் என்று பிரதமர் கூறினார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களை சந்திக்க முடியவில்லை என்றார்.
"ஆனால் எனது பதவிக் காலத்தில், நான் நிச்சயமாக உங்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
ஐ.பி.எஸ். பணியில் தினம் தினம் புதிய புதிய சாவால்களை எதிர் கொள்ளும் நிலை உள்ளதால், அதிக அளவு மன அழுத்தம் உள்ளது, அதனால்தான் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களுடன் தொடர்ந்து பேசுவது முக்கியம். மன அழுத்தத்தை போக்க யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சியை மேற்கொள்ளவும். ”
பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, "ஆரம்ப கட்டத்திலேயே இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை நாம் தடுக்க வேண்டும், மேலும் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பெண்கள் காவல்துறையினர் அதைச் சாதிக்க முடியும்" என்றும் கூறினார்.
மேலும் படிக்க | இந்திய சீனா எல்லையில் நிலைமை ”தீவிரம்” : ராணுவ தலைவர் நராவனே