லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்த தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக அலுவலகங்களில் வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தான் அதிக முறைகள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். மொத்தம் பாராளுமன்றத்துக்கு 9 தடவை தேர்வாகி எம்.பி.ஆக இருந்துள்ளார். இதை நினைவு கூறும் விதமாக லக்னோவில் வாஜ்பாய்க்கு சுமார் 25 அடி உயரத்துக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கிறார். இதே விழாவில் லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.