இந்திய பிரதமர் ஒருவர் பாலஸ்தீனத்துக்கு செல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்தச் சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள யாசர் அராஃபத் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மோடி மரியாதை செலுத்தினார். அதிபர் முகமது அப்பாஸை சந்திக்கும் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.


முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீனம் செல்லும் வழியில் ஜோர்டான் சென்றார். தலைநகர் அம்மான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து மன்னர் இரண்டாம் அப்துல்லாவை மோடி சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கிடையிலான உறவில் ஒரு புதிய அத்யாயம் என மன்னர் அப்துல்லாவும் கூறியுள்ளார்.