பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மூன்று புதிய உயர் ஆய்வகங்களை நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் ஜூலை 27 அன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெய்நிகர் நிகழ்வில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்பார்கள் என்று ஊடக உள்ளீடுகள் தெரிவிக்கின்றன.


உலகெங்கிலும் உள்ள மிகப் பழமையான மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளில் ஒன்றான ICMR நாட்டில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து ஊக்குவிக்க உதவுகிறது. தற்போது, ​​இது நாடு முழுவதும் COVID-19 சோதனைகளுக்கு தினமும் உதவி வருகிறது.


ஜூலை 23 வரை, ஐ.சி.எம்.ஆர் கோவிட் -19 க்கான 1.54 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 3.52 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டன.


ALSO READ: Corona: அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வெளியான நிவாரண செய்தி, விவரங்களை அறிக


Covid-19 பரிசோதனைகள் மட்டுமல்லாமல், தடுப்பு மருந்துகளுக்கான விதிமுறைகளை வழங்குவது, தடுப்பு மருந்துகள் மற்றும் கொரோனா தொற்று சம்பந்தமான பிற சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஆய்வு செய்து அவர்களது தயாரிப்புகளுக்கு அனுமதி வழங்குவது என ICMR பல பணிகளை செய்து கொண்டிருக்கின்றது.


கொரோனா தொற்றை பொறுத்த வரை, பரிசோதனைகள் மிக முக்கியமாகும். அவற்றை நாடு முழுதும் சீரான முறையில் நடத்தி பரிசோதனைகளின் அளவை தொடர்ந்து அதிகரிக்க வசதி செய்ததில் ICMR-க்கு பெரும் பங்குண்டு.


ஒரு சுகாதார அதிகாரி எமக்கு அளித்த தரவுகளின்படி, நாடு முழுவதும் 12.87 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில், 8.17 லட்சம் பேர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.


ALSO READ: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 9 மாநிலங்கள், மத்திய அரசு Special அறிவுறுத்தல்