அகமதாபாத் / ஹைதராபாத் / புனே: இந்தியாவில் மூன்று குறிப்பிடத்தக்க மருத்துவ நிறுவனங்களின் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மூன்று நகர சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொள்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் அலுவலகம் (PMO), இந்த நிறுவனங்களில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை அறிய மோடி அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனேவுக்கு செல்வார் என்று கூறியது.



“நாளை, பிரதமர் நரேந்திர மோடி தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய 3 நகரங்களுக்கான பயணத்தை மேற்கொள்வார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றை அவர் பார்வையிடுவார். COVID-19 க்கு எதிரான போராட்டத்தின் ஒரு தீர்க்கமான கட்டத்தில் இந்தியா நுழையும் போது, ​​பிரதமர் @narenarendramodi இந்த மருத்துவ நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவது, இந்திய குடிமக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான முயற்சிகள், சவால்கள் மற்றும் வழித்தடத்திற்கான ஒரு தெளிவான கண்ணோட்டத்தைப் பெற அவருக்கு உதவும்” என்று பி.எம்.ஓ ட்வீட் செய்துள்ளது.


அகமதாபாத்திற்கு (Ahmedabad) அருகிலுள்ள மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான மேஜர் ஜைடஸ் காடிலாவின் ஆலைக்கு பிரதமர் செல்வது இதுவே முதன் முறையாகும் என்று குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் முந்தைய நாள் தெரிவித்தார்.


அகமதாபாத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள சங்கோதர் தொழில்துறை பகுதியில் உள்ள ஆலைக்கு காலை 9:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வருவார். தங்களது தடுப்பு மருந்தான 'ZyCoV-D’-ன் முதல் கட்ட மருத்துவ சோதனை முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட சோதனைகள் ஆகஸ்டில் தொடங்கப்பட்டதாகவும் Zydus ஏற்கனவே அறிவித்திருந்தது.


ALSO READ: Corona Vaccine-க்கான முழு செலவையும் மோடி அரசாங்கமே ஏற்கவுள்ளதா


அங்கிருந்து மதியம் 1:30 மணியளவில் பாரத் பயோடெக் நிறுவனத்தைப் பார்வையிட ஹைதராபாத்திற்குச் செல்வார். பிரதமர் ஹக்கீம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கி ஹைதராபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் உள்ள இந்த மருத்துவ நிறுவனத்திற்குச் செல்வார். பாரத் பயோடெக்கின் Covaxin தற்போது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது.


பின்னர் அவர் மாலை 4:30 மணியளவில் புனேவை அடைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பிரதமர் மாலையில் மீண்டும் டெல்லிக்கு (Delhi) திரும்புவார்.


ALSO READ: ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் COVID Vaccine: திட்டத்துடன் தயாராகிறது அரசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR