வளமான இந்தியா உருவாகும்!! 45 உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா மிகவும் அமைதியான, நிலையான, பாதுகாப்பான, மற்றும் வளமான உலகத்தை உருவாக்க பங்காற்றி வருகிறது என பிரதமர் அறிக்கை.
புதுடெல்லி / ஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தனது அமெரிக்க பயணத்தை தொடங்க உள்ளார். அவர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னதாக "இந்தியாவை உலக முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், அமெரிக்காவுடனான உறவை அதிகரிப்பதும் தனது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் பிரதமர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவார்.
அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னதாக கூறிய அவர் அறிக்கையில், "எனது அமெரிக்கா வருகை இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். உலகளாவிய தலைவர்கள் முன்பு கலந்துரையாட முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவுடனான எங்கள் உறவுகளுக்கு புதிய ஆற்றலை வழங்க உதவும் என்றும் நான் நம்புகிறேன். அமெரிக்க அதிபரை சந்திக்க ஆவலுடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 45 உலகத் தலைவர்களை பிரதமர் சந்திக்க உள்ளார். மேலும் அவர் இருதரப்பு உறவு குறித்து பேச நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை அன்று அதிபர் டொனலாட்டிரம்பை சந்திக்க உள்ளார். ஜப்பானில் ஜி-20 உச்சிமாநாடு மற்றும் பிரான்சில் ஜி-7 உச்சிமாநாட்டில் டொனால்டு டிரம்ப்பை சந்தித்ததை அடுத்து, மீண்டும் சந்திக்க உள்ளார். இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியு 3வது முறையாக அவர் சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தனது அறிக்கையில், "கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வளமான சாத்தியக்கூறுகள், பொருளாதார வளர்ச்சி, தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பில் இந்தியாவுக்கு உதவியாக அமெரிக்கா ஒரு முக்கிய பங்காளியாக இருக்கும். ஒன்றாக வேலை செய்கிறோம், நாங்கள் (இந்தியா) மிகவும் அமைதியான, நிலையான, பாதுகாப்பான, மற்றும் வளமான உலகத்தை உருவாக்க பங்காற்றி வருகிறோம் எனக் கூறினார்.