நாட்டின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். குடியேற்றத்திற்கு முன் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைத் தடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கி நடைபெற்றது. அதனைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை நடத்திய வான்வெளி சாகசங்களினை மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்.


டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவர்கள், அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் முப்படை தளபதிகள்,எனப் பலர் கலந்து கொண்டனர். இது தவிர டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.


Also Read | 75வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி


"கொடியேற்றத்திற்கு பின் இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நிகழ்வில் நாட்டினை கட்டமைக்க பாடுபட்ட மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் அரும்பணிகளை நாம் நினைவு கூறுவோம். என்று தெரிவித்தார்


 பின்  விவசாயிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டு பேசும்போது "இதுநாள்வரையில் நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 1.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தவிர 70க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் விவசாயிகளுக்காக ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


"இப்படி பிரதமர் மோடி கூறிவரும் நிலையில் இன்று பஞ்சாப், தமிழ்நாடு ,ஹரியானா, உத்திரப்பிரதேசம் என பல மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். 


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 75வது சுதந்திர தினத்தை விவசாயத் தொழிலாளர்கள் சுதந்திரப் புரட்சி தினமாக கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR