Priyanka Gandhi Viral Video: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப். 19ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து ஏப். 26ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை 280 மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. இன்னும் நான்கு கட்டங்கள் பாக்கியுள்ளது. அந்த வகையில் நான்காவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. 


4ஆம் கட்ட வாக்குப்பதிவு


இந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவு பெரும்பாலானவை தென் மாநிலங்களில் நடைபெறுகிறது. மொத்தம் ஆந்திராவின் 25 தொகுதிகளிலும், தெலங்கானாவின் 17 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்தின் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகள், மேற்கு வங்கத்தின் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தின் 8 தொகுதிகள், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் தலா 5 தொகுதிகள், ஒடிசாவின் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரின் 1 தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் மே 13ஆம் தேர்தல் நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | சாம் பெட்ரோடாவின் சர்ச்சை பேச்சு: கராராக பதிலளித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்


ரேபரேலியில் பிரியங்கா காந்தி


பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து பரபரப்பான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் தொடர்ந்து பரப்புரை பணியில ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் தற்போது அவர் போட்டியிடுகின்றனர். முன்னதாக, கடந்த தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்த அமேதியில் மீண்டும் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரேபரேலி தொகுதியை தேர்வு செய்தார்.


இந்நிலையில், ராகுல் காந்தியை வெற்றி பெற அவரின் சகோதரி பிரியங்கா காந்தி தொடர்ந்து கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இரவு பகல் பாராமல் தெருமுனை கூட்டங்களிலும் பங்கேற்று உரையாற்றி வருகிறார். ஒரு சமயம் பிரச்சார வாகனத்தில் மேல் உட்கார்ந்தும், சில சமயம் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று மக்களிடையே உரையாற்றுகிறார். 


மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி 


அந்த வகையில் நேற்று அவர் செய்த பிரச்சார வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரேபரேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட பச்ராவன் சட்டமன்ற தொகுதியில் நேற்றிரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த இடத்தில் எவ்வித வெளிச்சமும் இல்லை, பேசுவதற்கு மைக்கும் இல்லாத நிலையில், மொபைல் டார்ச் வெளிச்சத்தில் உரத்த குரலில் பிரியங்கா காந்தி பரப்புரையில் ஈடுபட்டது பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது. அங்கு இருட்டாக இருந்த நிலையில், மக்கள் தங்கள் கையில் உள்ள டார்ச் லைட்டை அடித்து பிரியங்காவின் பேச்சை கேட்டனர்.



பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று ஆவேசமாக பேசிய பிரியங்கா காந்தி,"இந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாகிய நீங்கள் எப்போதும் அரசியல் தளத்தில் நாட்டிற்கே வழிகாட்டியுள்ளீர்கள். கொள்கைகள் எப்போது தவறாகிறதோ அப்போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகிறீர்கள். இந்த நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியையே நீங்கள் தோற்கடித்தவர்கள். அதேபோல் எதிரிகளையும் வீழ்த்தியுள்ளீர்கள். இதுதான் உங்களின் வழக்கம். இந்திரா காந்தியும் உங்களிடம் இருந்துதான் தனது பாடத்தை கற்றுக்கொண்டார். நீங்கள் அவரை தோற்கடித்த போது அவர் கோபமடையவில்லை. இந்த காலத்தில் பல அரசியல்வாதிகள் செய்வதுபோல் உங்களுக்கு அவர் எந்த தீங்கும் செய்யவில்லை. 


மத்திய அரசு மீது கடும் சாடல்


பொதுமக்கள் நாம் தவறுசெய்வதாக கூறுகிறார்கள் என்றால் அதனை கற்றுக்கொண்டு அதை சரிசெய்ய வேண்டும் என்றுதான் இந்திரா காந்தி கூறுவார். அவரை நீங்கள் தோற்கடித்து மூன்றாண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் தனது தவறுகளை திருத்திக்கொண்டதாக நீங்கள் உணர்ந்த பின் அவரை வெற்றி பெற வைத்தீர்கள்" என்றார். இது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.


மேலும் மைக் இல்லாமல் தற்போதைய மத்திய அரசை கடுமையாக சாடிய பிரியங்கா காந்தி,"இன்று இருக்கும் பிரதமர் மிகப்பெரிய கோழை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் கைது செய்துவிடுவார். அவரை நாடாளுமன்றத்தில் இருந்தே தூக்கியெறிவோம். இன்று விவசாயி வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் விலை உயர்ந்துள்ளது" என்றார். ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வரும் மே 20ஆம் தேதி அதாவது ஐந்தாவது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | Air India Express... 30 பேர் பணிநீக்கம்... மற்றவர்களுக்கு இறுதி எச்சரிக்கை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ