டிக்டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படும் டிக்டாக் செயலியால் பல இளைய தலைமுறையினர் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இந்த செயலி மூலம் தமிழக கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதில் வீடியோ மூலம் பல தவறான செயல்களும், மற்றவர்களை மிகவும் பாதிக்கும் வகையில் கிண்டல் செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கும் ஏற்ப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல குரல்கள் தமிழகத்தில் எழுப்பட்டது.


இந்நிலையில், டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் உத்தரவிட்டது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 


இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, இந்த வழக்கு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.