புதுச்சேரியில் அமித்ஷாவின் வருகைக்கு தீவிர எதிர்ப்பு! 200 பேர் கைது
புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அமித்ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு நாள் அரசு முறை பயணமாக மத்திய அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பல்வறு இயக்கங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்துக் கொடுத்ததாக 4 பேரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்த நிலையில் மதசார்பற் கட்சிகள் சாரம் அவ்வை திடல் எதிரே கருப்புக்கொடியுடன் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த நிலையில் பாலாஜி திரையரங்கம் அருகே புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி "திரும்பிப்போ அமித் ஷா!" என்ற கோஷங்ளை முன்வைத்து கருப்புக் கொடியுடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அவர் வருகையை கண்டித்து கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் அமித்ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
அந்த உருவம் எரிக்க விடாமல் போராட்டக்காரர்களிடம் இருந்து அகற்றும் போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் படிக்க| 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!
இதனால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உருவபொம்மையை எரிக்க முயன்றதாக போராட்டக்காரர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் இளங்கோ கூறும்போது, "மாநில அரசுக்கு எந்தவித நன்மையும் பயக்காத விதத்தில் அமித்ஷாவின் பயணம் அமைந்துள்ளது. இவரது பயணத்தால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.
மாநில வளர்ச்சிக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் அவர் புதுச்சேரிக்குள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை ஏந்தியும் உருவபொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினோம்." என தெரிவித்தார்.
மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR