ஆந்திரா முதல்வர் YS ஜகன் மோகன் ரெட்டி-ன் மூன்று தலைநகரம் அமைக்கும் திட்டத்திற்கு தற்போது கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில்., YS ஜகன் மோகன் ரெட்டியின் மூன்று தலைநகரங்கள் திட்டத்தினை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் அமராவதி வேலகாபுடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. YS ஜகன் மோகன் ரெட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள்... நாங்கள் என்ன முட்டாள்களா?, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் எங்கு செல்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஊடக அறிக்கையின்படி, அமராவதி கிராமத்தில் பெண்கள், மூத்தவர்கள், கிராம மக்கள் அனைவரும் உட்பட, வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் தர்ணாவில் அமர்ந்தனர். போராட்ட இடத்தில் நிகழும் பதற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க தடை உத்தரவுகளும் செயல்படுத்தப்பட்டன. 



போராட்டங்களுக்கு மத்தியில் மூன்று தலைநகரங்களை அமைப்பதற்கான முடிவு நிபுணர் குழுவைப் படித்த பின்னரே வரும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முதல்வரின் இந்த முன்மொழிவைப் படித்து அறிக்கையைத் தயாரித்து முன்வைக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.


இந்நிலையில் தற்போது ‘ஆந்திராவின் தலைநகரம் குறித்து GN ராவ் தலைமையிலான நிபுணர் குழு தனது அறிக்கையை முதல்வர் YS ஜகன்மோகன் ரெட்டியிடம் சமர்ப்பித்துள்ளது.' எனவே மூன்று தலைநகர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இப்போது கர்னூல், விசாகப்பட்டினம், மற்றும் அமராவதி ஆகியவற்றை ஆந்திராவின் மூன்று தலைநகரங்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, மாநிலத்தின் மூன்று வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து அரசாங்கம், சட்டசபை மற்றும் நீதி செயல்முறை போன்றவற்றை இயக்கும் என தெரிகிறது. தற்போது ஹைதராபாத் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் தலைநகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.