2-வது நாளாக டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக போராட்டம்

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறது.
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டை இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனது. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது.
முன்னதாக நேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் போராட்டம் நடத்தினர்.
தற்போது இந்த போராட்டம் டெல்லியிலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர்.