சினிமா பாணியில் நடந்த கொடூரக் கொலை என்று சொல்வதெல்லாம் ஒருவித உக்கிரத்தன்மைக்காகத்தானே ஒழிய, யதார்த்த வாழ்க்கையில் அரங்கேறும் கொலைகள் அதைக்காட்டிலும் பயங்கரமானவை. கர்நாடகாவில் இரு பெண்களின் கொலை அந்த வகையில் கொடூரமாக நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவம் - 1


கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பேபி கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. அதன் அருகே ஒரு கால்வாயும் ஓடுகிறது. அந்த கால்வாயில் நேற்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் மிதந்து வந்தது. 


மேலும் படிக்க | CRIME : தந்தையை கொன்று புதைத்த மகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை


அந்த பெண்ணின் உடல் பாதியளவு மட்டுமே இருந்தது. இடுப்புக்கு கீழ் பகுதி வெட்டப்பட்டு இருந்தது. அந்த மீதி பாதியளவு உடல் எங்கே என்று தெரியவில்லை. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். 


சம்பவம் - 2 


ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தைச் சேர்ந்த சிக்க தேவராஜா என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் பண்ணைக் குட்டை உள்ளது. அந்த பண்ணைக் குட்டையில் மீன் பிடிப்பதற்காக அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூண்டில் வீசினார். அப்போது தூண்டிலில் சிக்கி மற்றொரு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வந்தது. அந்த உடலும் பாதியளவு மட்டுமே இருந்தது. இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 


யார் கொலையாளி ?


இந்த கொலைகள் குறித்தும் அந்தந்த பகுதி காவல்நிலையங்களுக்கு புகாராக செல்ல, பாண்டவபுரா மற்றும் அரகெரே போலீசார் சம்பவ இடங்களுக்குச் சென்று துண்டிக்கப்பட்ட இரு உடல்களையும் மீட்டனர். இதில் இரண்டாவதாக மீட்கப்பட்ட உடலின் பெண்ணுக்கு 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரண்டு பெண்ணின் உடல்களும் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் மீத உடல்கள் எங்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கொலையுண்ட பெண்களும் யார் என்றே இதுவரை தெரியவில்லை. இதனால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். கொலையாளி யாராக இருக்கலாம் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த இரு கொலைகளின் வடிவமும் ஒரே மாதிரி நடைபெற்றுள்ளதால் நிச்சயம் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்தக் கொலைகளை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் கணிக்கின்றனர். 


மேலும் படிக்க | யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!


அதுமட்டுமல்லாமல், சைக்கோ பாணியில் கொலைகள் நடந்திருப்பதால் சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கன்றனர். இந்த இரு கொலைகளால் அப்பகுதி பதட்டம் அடைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளதால் போலீஸார், கொலையாளிகள் யார் என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR