2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து 2018-ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலத்தில் இந்திய அரசின் கடன் சுமையை 90,56,000 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக இந்திய குடிமக்கள் ஒவ்வொருவர் தலையிலும் கூடுதலாக ரூபாய் 24,300 கடன் சுமை உயர்ந்துள்ளது எனவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசின் ஒட்டு மொத்த கடன் தொகை ரூபாய் 53,11,081 கோடி ஆகும். 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய அரசின் கடன் தொகை ரூபாய் 83,40,026 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கடன் தொகை விவரங்களை இந்திய அரசு எங்கும் வெளியிட முன்வரவில்லை.


இந்திய அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களை திரட்டி அவற்றின் கடன் தொகைகளை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் கூட்டினர். கடன் தொகையின் மொத்த மதிப்பு 83,40,026 கோடி என மதிப்பிட்டுள்ளனர்.


இந்த ஒட்டு மொத்த தொகை கொஞ்சம் குறைவானது என்றும் காங்கிரஸ் நிபுணர்களின் கணக்கில் இருந்து ரூபா 7,16,700 கோடி விடுபட்டுள்ளது என்று பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காங்கிரஸ் கணக்கில் விடுபட்ட அந்த தொகையும் சேர்த்தால் அரசின் ஒட்டு மொத்த கடன் தொகை 90,56,000 கோடி ரூபாய் ஆக உயரும் என கூறப்படுகிறது.


இந்த உயர்வு காரணமாக இந்திய குடிமகனின் தனி நபர் கடன் தொகை 40,854 (2014-ஆம் ஆண்டு) என்ற அளவில் இருந்து ரூபாய் 64,154 ஆக உயர்ந்துள்ளது. பனமதிப்பிழப்பு, GST என நாட்டை நாசம் செய்த பாஜக அரசு, இந்திய அரசை மீளமுடியாத கடன் சுமையிலும் தற்போது தள்ளி உள்ளது.


கடன் சுமை உயர்ந்துள்ள காரணத்தினால், அந்தக் கடனுக்கு வட்டி கட்டவே புதுக் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டு உள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுரஜ்வாலா பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார்.