புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் ரோபோ சங்கர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் (கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன்) சேர்ந்தவர்கள்.


அந்தவகையில் தாக்குதலில் பலியான வீரர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் சிவச்சந்திரன் ஆகியோருக்கு தமிழக அரசு ஏற்கனவே நிதியுதவி அளித்துள்ளது. 


இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர், ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். வீரர்களின் சொந்த ஊருக்கு சென்று அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மறைந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.