புல்வாமா தீவிரவாத தாக்குதல்: பாகிஸ்தான் தேசிய கொடி எரிப்பு!!
புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான பொது மக்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான பொது மக்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அப்பொழுது பயங்கரவாதி திடிரென வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த கான்வாயில் மோதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியது.
இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கோர விபத்தில் இதுவரை 44 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதேவேளையில் துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பீகார், டெல்லி, ஔரங்காபாத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொது மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் ஒருசில இடங்களில் பயங்கரவாத குழு தலைவர் மைசூர் ஆசாத் உருவப் படத்துடன் தீ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.