தீவிவாதிகளை கொண்டாடும் பாகிஸ்தானின் பிரபல ஊடகம்!!
புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த தீவிரவாதியை விடுதலைப் போராளியாக சித்தரித்து பாகிஸ்தான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த தீவிரவாதியை விடுதலைப் போராளியாக சித்தரித்து பாகிஸ்தான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாகிஸ்தான் நாளேடுகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான நாளேடான ‘தி நேஷன்’ பத்திரிகை ‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய விடுதலைப் போராளி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.