ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அப்பொழுது பயங்கரவாதி திடிரென வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த கான்வாயில் மோதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கோர விபத்தில் இதுவரை 44 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதேவேளையில் துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த துயர சம்பவத்தில் வீரமரணம் அடைந்தவர்களில் ஆக்ராவை சேர்ந்த கௌசல் குமார் ராவத் ஒருவர். அவரின் இறப்பு செய்தி கேட்ட அவரின் குடும்பத்தார் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அவரின் தாய்-தந்தையின் அழுகையின் குரல் தொடர்ந்து வண்ணம் உள்ளது. 


இதுக்குறித்து அவரின் தயார் கூறிகையில், மூன்று நாட்களுக்கு முன்பு தான் விடுமுறை முடிந்தபின் அவர் பணிக்கு சென்றார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் வீட்டுக்கு வந்திருந்தார். அப்பொழுது எனக்கு ஒரு புதிய புடவையை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். இப்போது அவன் இல்லை. எங்களால் எப்படி வாழ முடியும்? எனக் கண்ணீருடன் கூறினார்.


கௌசல் குமார் ராவத் தானா தாஜ்கஞ்ச் கஹார் கிராமத்தில் வசிப்பவர். 47 வயதான் கௌசல் குமார் ராவத் 1991 ஆம் ஆண்டு சி.ஆர்.பி.எப். பணியில் சேர்ந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவர் மனைவி மம்தா மற்றும் இளைய மகன் விசால் உடன் சேர்ந்து குர்கானில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் இறுதியில், சிலிகுரி (மேற்கு வங்காளத்திலிருந்து) ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டார். மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 15 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்துடன் விடுமுறையை கழித்துள்ளார். விடுமுறை முடிந்தப்பின் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார். சி.ஆர்.பி.எஃப் மற்றும் இராணுவத்தில் கௌசல் குமார் ராவத்தின் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் பணியில் உள்ளனர்.