கடன் தொல்லை காரணமாக புனே தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புனே-வை சேர்ந்த நிலேஷ் சௌதிரி என்பவரது குடும்பம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது மனைவி மற்றும் 2 மகள்கள் படுக்கையில் பிணமாக இருக்க இவர் உத்திரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு இரந்துள்ளார்!


பலியானவர்கள் நிலேஷ் சௌதிரி(38), அவரது மனைவி நீலம்(33) மற்றும் மகள்கள் சர்வானி(9), ஸ்ரேயா(7) என காவல்துறை முதற்தகவல் தெரிவிக்கிறது.


நிலேஷ் பிளாஸ்டிக் ரீமாடலிங் தொழில் செய்து வருபவர். கடந்த சில தினங்களாக இவர் கடண் தொல்லையில் சிக்கி வந்ததாகவும், அதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் என காவல்துறை அதிகாரி ஹேமந்த் பட் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து, நிலேஷ்-ன் பக்கத்து வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் பல் மருத்துவர், கடண் தொல்லை காரணமாக தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அடுத்த சில தினங்களிலேயே மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!