மாணவிகள் வெள்ளை அல்லது ஸ்கின் (தோல்) கலர் உடைய உள்ளாடைகள் மட்டும் அணிய வேண்டும் என புனேவில் டாப் வரிசையில் இருக்கும் பள்ளி கட்டுப்பாடு விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநில புனேவில் விஷ்வ சாந்தி குருகுலம் என்ற பெயரில் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு  உள்ளாடை கட்டுப்பாடு குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


பெண்கள் வெள்ளை வண்ணம் அல்லது தோல் வண்ண உட்புற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். இந்த விதிமுறைக்கு பெற்றோர்கள் கட்டயமாக கையெழுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். மற்ற நேரங்களில் செல்லக்கூடாது எனவும், தண்ணீர் அருந்தவும் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்ல வேண்டும் என அட்டவணை வெளியிட்டுள்ளது. 


ஆனால் பல பெற்றோர்கள் இந்த விதிகள் எதிர்த்தனர், ஆனால் பள்ளி நிவாகம் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்காக புதிய விதி செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி பெற்றோர்களின் கோரிக்கையை நிராகரித்தது. இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் புதிய விதிமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


தற்போது பெற்றோர்கள் இது சம்பந்தமாக ஆரம்ப கல்வி இயக்குனரிடம் புகார்கள் தெரிவித்துள்ளனர்.