புனேவில் HIV நோய் தொற்று காரணமாக வேலையை இழந்த பெண்ணை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அந்தப் பெண் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு HIV தொற்று இருப்பதை அறிந்த அந்த நிறுவனம் அந்த பெண்ணை பணியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தி கடிதம் பெற்றுக் கொண்டது. 


இதை தொடர்ந்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் அந்தப் பெண் தரப்பில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், HIV-யைக் காரணம் காட்டி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது. அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிமன்றம், 3 ஆண்டுகளுக்கான ஊதிய நிலுவையையும் வழங்க உத்தரவுவிட்டுள்ளது.



இது குறித்து பாதிக்கப்பட பெண் கூறுகையில், HIV நோய் தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இழந்த தனது வெளியை அவர் மீண்டும் திரும்பபெருள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.