பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை அளித்துள்ளதாக முதல்வர் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 70க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.


பஞ்சாப் முடிவு நிலை 2:30 pm: காங்கிரஸ் 47 தொகுதிகளில் வெற்றி, 29 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 16, 5 முன்னிலையாக வழிவகுக்கிறது. 


பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு வாழ்த்து.


 



 


பஞ்சாப் முடிவு நிலை 2 pm: காங்கிரஸ் 46 தொகுதிகளில் வெற்றி, 31 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி 12, 9 முன்னிலையாக வழிவகுக்கிறது. 


பஞ்சாப்: தேத்தல் ஆணையம் 1:30 pm தகவலின் படி : காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி, 59 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி 8, 12 முன்னிலையாக வழிவகுக்கிறது. 


பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வியை ஏற்றுக்கொண்டார், நாளை ராஜினாமா.


 



 


கேப்டன் அமரீந்தர் சிங் 51000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.


பஞ்சாப்: காங்கிரஸ் நான்கு சட்டசபை தொகுதிகளில் 70-ல் முன்னணி, ஆம் ஆத்மி 1, 


பஞ்சாப் : பா.ஜ.க.,-19, காங்.,-71, ஆம் ஆத்மி கட்சி-26, மற்றவை-1, 10 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி


பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை....


பஞ்சாப்பில் காங்கிரஸ் முன்னிலை


பஞ்சாப்பில் காங்., முன்னணி; உ.பி.-யில் பாஜக முன்னணி


பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியும், உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.


பஞ்சாபில் ஆட்சியை அகாலிதளம்- பாஜக பறி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது காங்கிரஸா அல்லது ஆம் ஆத்மியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


முன்னதாக, வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒன்றான சிவோட்டர் கருத்துக் கணிப்புப்படி, உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் எனவும், உத்தரக்காண்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சம அளவிலான இடங்களை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் பாஜக-வே வெற்றி பெரும் என கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.