பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் வெளிநாடு தப்பி சென்ற,  வைர வியாபாரியான நிரவ் மோடி (Nirav Modi), ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக மத்திய புலனாய்வுக் கழகம் சிபிஐ  வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் (CBI) , ₹5000 கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, லாவேசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்ற நிரவ் மோடி (Nirav Modi), அங்கிருந்து இந்தியா திரும்பிவில்லை. கடந்த மார்ச் மாதம்  லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்தியாவில் நீதி விசாரணை அமைப்புகள் சுதந்திரமானது, எனவே நிரவ் மோடி விசாரணைக்காக இந்தியா கொண்டு வரப்பட்டால், அவருக்கு பாதுகாப்பு இருக்காது என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். 


இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டால் தனது மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் (Nirav Modi) தரப்பு வாதத்தில் எந்த நியாயமும் இல்லை, எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் நாடுகடத்தப்பட்டால் நீரவ் மோடி மும்பை (Mumbai) ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் என்றும், அவருக்கு அங்கு சரியான  உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது


இந்த வழக்கின்  இறுதி விசாரணை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. விசாரணை நடவடிக்கைகள் ஜனவரியில் முடிந்து தீர்ப்பு வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.


பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியில் தொடர்புடைய அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரையும் விசாரணைக்காக இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


ALSO READ | PNB வழக்கு: நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR