மக்களவை எம்.பி. மோகன் டெல்கர் மர்ம மரணம்-மும்பை ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டாரா?

தாத்ரா நாகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கரின் உடல் தெற்கு மும்பையில் உள்ள சீ கிரீன் மரைன் டிரைவ் ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2021, 06:15 PM IST
  • மக்களவை எம்.பி. மோகன் டெல்கர் மும்பை ஹோட்டலில் மர்மமான முறையில் மரணம்.
  • அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என வலுக்கிறது ஊகம்.
  • மோகன் டெல்கர் மரணம் குறித்து மேலதிக விசாரணை நடந்து வருகிறது.
மக்களவை எம்.பி. மோகன் டெல்கர் மர்ம மரணம்-மும்பை ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டாரா?  title=

மும்பை: மக்களவை எம்.பி. மோகன் டெல்கர் திங்களன்று மும்பை ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளின் கூற்றுபடி, தாத்ரா நாகர் ஹவேலி எம்.பி.யின் உடல் தெற்கு மும்பையில் உள்ள சீ கிரீன் மரைன் டிரைவ் ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்டது.

குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட ஒரு தற்கொலைக் குறிப்பும் அருகில் மீட்கப்பட்டுள்ளது.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி.யாக சேவை செய்துள்ள 58 வயதான டெல்கரின் சடலம் தெற்கு மும்பையில் (Mumbai) உள்ள மரைன் டிரைவ் ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறை பி.ஆர்.ஓ கூறுகையில், “மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் எம்.பி மோகன் சஞ்சிபாய் டெல்கரின் சடலம் மரைன் டிரைவ் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!!

போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். தற்கொலைக் (Suicide) குறிப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் அறியப்படும்" என்றார்.

எனினும், தற்கொலை செய்து கொண்ட எம்பி-யின் உடலுக்கு அருகில் காணப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க காவல்துறை அதிகாரி மறுத்துவிட்டார் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ. தெரிவித்தது.

டெல்கர் 2019 மே மாதம் 17 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு அவர் அவர் ஏழாவது முறையாக எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பணியாளர்கள், பொது குறைகளை, சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவில் உறுப்பினராகவும், கீழ் சபையின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

மோகன் டெல்கர் மரணம் குறித்து மேலதிக விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தி குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ALSO READ: மீண்டும் தீவிரமாகும் கொரோனா தொற்று; பள்ளி, கல்லூரிகளை மூட அரசு திட்டம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News