Punjab அமைச்சரவை விரிவாக்கம்: 15 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தில், முன்னாள் அமைச்சர்கள் பல்பீர் சிங் சித்து, சாது சிங் தரம்சோத், குர்பிரீத் சிங் காங்கட் மற்றும் ராணா குர்மீத் சோதி ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாலை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் மாநிலத்தின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த 15 தலைவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்
பஞ்சாப் (Punjab) ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ப்ரம்ம மகேந்திரா, மன்ப்ரீத் சிங் பாதல், த்ருப்த ராஜிந்திர சிங் பாஜ்வா, அருணா சவுத்ரீ, சுக்விந்தர் சிங் சர்காரியா, ராணா குர்ஜீத் சிங், ரஜியா சுல்தானா, விஜய் இந்தர் சிங்ளா பாரத் பூஷன் ஆஷு, ரந்தீப் சிங் நாபா, ராஜ்குமார் வேர்கா, சங்கத் சிங் கில்ஜியா, பர்கட் சிங், அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் மற்றும் ஜுர்கீரத் சிங் கோட்லி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த தலைவர்கள் சேர்க்கப்படவில்லை
சன்னி அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தில், முன்னாள் அமைச்சர்கள் பல்பீர் சிங் சித்து, சாது சிங் தரம்சோத், குர்பிரீத் சிங் காங்கட் மற்றும் ராணா குர்மீத் சோதி ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. பாஜகவின் (BJP) வழியில், புதிய நபர்களுக்கு அரசாங்கத்தில் பதவியை வழங்கி பொதுமக்களின் அதிருப்தியைத் தணிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
ALSO READ: நான் அவமானமாக உணர்கிறேன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் சோகம்
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க முயற்சி
அமைச்சரவையின் இந்த விரிவாக்கத்தில், கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவரின் பிரிவுகளையும் திருப்திபடுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இரு பிரிவுகளின் அமைச்சர்களின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பல முக்கிய நபர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளனர். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வலுவான நிலையைப் பெற காங்கிரஸ் (Congress) முயல்கிறது.
ALSO READ: Bharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR