புது டெல்லி: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்த பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். அவருடன் சேர்ந்து அவரது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பல மாதங்களாக, பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அதிகரித்து வந்தது.
ஆளுநரிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பிறகு செய்தி ஊடகங்களிடம் பேசிய கேப்டன் அமரீந்தர் சிங், 'இன்று காலை எனது ராஜினாமா குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார். காலையில் எனது ராஜினாமா பற்றி காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நடக்கிறது என்று அவர் கூறினார். என்னால் அரசாங்கத்தை நடத்த முடியவில்லை என்று மேலிடம் நம்புகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு (சோனியா காந்தி) யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அவரை முதல்வராக்குவார் என்று அவர் கூறினார்.
I feel humiliated, says Amarinder Singh after resigning as Punjab CM
Read @ANI Story | https://t.co/1KAbeEz17Q#AmarinderSingh pic.twitter.com/WGv4851zli
— ANI Digital (@ani_digital) September 18, 2021
Whoever they (party high command) have faith in, can make them (Punjab CM)...: Amarinder Singh after resigning as Punjab CM pic.twitter.com/uoaoSu5ds6
— ANI (@ANI) September 18, 2021
கேப்டன் அமரீந்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, எதிர்கால அரசியல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், எனது ஆதரவாளர்களிடம் பேசுவேன், அதன்பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். பஞ்சாபின் வருங்கால முதல்வர்கள் பற்றிய யூகங்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
I am in the Congress party, will consult with my supporters and decide the future course of action: Amarinder Singh after resigning as Punjab CM pic.twitter.com/8hkJ2llT1m
— ANI (@ANI) September 18, 2021
நான் இன்னும் காங்கிரசில் தான் இருக்கிறேன் என்று கூறினார். எனது முதல்வர் பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்துள்ளேன். எதிர்கால அரசியல் என்பது அவர் அவரின் விருப்பத்தை பொருத்தது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்துவேன் என்றார். பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான் அவமானமாக உணர்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR