பஞ்சாப்பில் விசாரணைக்காக பெண்ணை போலீஸ் வாகனத்தின் மேல் கட்டி அழைத்துச் சென்ற கொடூரம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாபின் அமிர்தசார் மாவட்டத்தில் போலீஸார் ஒரு விசாரணை கைதி பெண்ணை காவல்துறையினர் அவரது வாகனத்தின் கூரையில் கட்டி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீப்பில் இருந்து கீழே விழுந்த பெண்ணி  தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரை அமிர்தசரஸ் மாவட்டத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். 


இதையடுத்து அந்த காவல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சொத்து தகராறு வழக்கு தொடர்பாக அவரது மாமனாரை சந்திக்கும்படி அம்ரித்ஸரின் சாவந்த தேவி வட்டாரத்தில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர்.


பாதிக்கப்பட்டவரின் மாமனார் வீட்டிலேயே இல்லை என்பதால், போலீசார் அவளை கடுமையாக எதிர்த்திருந்த கணவனை அழைத்துச் செல்ல விரும்பினர். இதன் மூலம் கோபமடைந்த பஞ்சாப் பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்தப் பெண்ணை தங்கள் ஜீப்பின் கூரையில் கட்டாயப்படுத்தி, நகரை முழுவதும் வளம் வந்துள்ளனர். 


அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவளைதளம் முழுவதும் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீப்பின் மேற்கூரை மீது அவரை கட்டிவைத்து சாலையில் ஜீப் சென்றுகொண்டிருக்கும் போது அந்த பெண் திடீர் என கீழே வெளுகிறார். ஆனால், அந்த வாகனத்தி இருத்த யாரும் அவரை கவனிக்கவே இல்லை. சாலையில் விழுந்த அந்த பெண்மணி உடனே எழுந்து ஓடுகிறார். 


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இது விசாரணை நடத்த காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக உத்தரப்பிரதேச மீரட் நகரில் முஸ்லிம் நபரை காதலித்த இந்து பெண்ணை காவல்துறையினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறிப்பிடத்தக்கது....!