உ.பி., மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஏ வரலாற்று தேர்வில் முத்தலாக் மற்றும் அலாவுதீன் கில்ஜி தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அப்பல்கலைக்கழக பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, வரலாற்றை கற்பிக்கையில் இதுபோன்ற பாடப்பகுதிகள் வருவது சகஜம்.


உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் போது, இஸ்லாம் பற்றி அறியும் போது, முத்தலாக் மற்றும் அலாவுதீன் கில்ஜி பற்றிய விஷயங்களை கற்பிக்கத் தான் செய்வோம்.


மேலும் சஞ்சய் லீலா பன்சாலி போன்றோன் உண்மையான வரலாற்றைக் கற்றுத் தர மாட்டார்கள் என்றும் ராஜீவ் தெரிவித்தார்.