ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே, மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் குறித்த மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியில் பேரம் பேசப்பட்டதைக் காட்டிலும், குறைவான விலையிலேயே ரஃபேல் விமானங்களை பா.ஜ.க. அரசு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, இதுக்குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிஏஜி அறிக்கை மூலம் உண்மை வெளிவந்துள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் குற்றசாற்று உண்மையில்லை பொய் என்று அம்பலமாகி உள்ளது. இப்பொழுது சொல்ல முடியாது சுப்ரீம் கோர்ட் தவறானது என்றும், சிஏஜி தவறானது என்றும். தேசத்தில் தொடர்ந்து பொய் சொல்லும் கட்சிகளை ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது? சிஏஜி அறிக்கை மூலம் ரபேல் குறித்த உண்மை நிலவரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மெகா கூட்டணியின் பொய்கள் அம்பலமாகி உள்ளது. 


இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.