பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை அனில் அம்பானியின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிகளை மேற்கொள்ள சொன்னது. வேறு எந்த நிறுவனம் குறித்தும் எங்களுக்கு சிபாரிசு செய்யப்படவில்லை. இந்திய அரசு தான் அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்சுடன் ஒப்பந்தம் செய்ய சொன்னது எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார். 


இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தனாவ், ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில், தங்களுக்கு எந்த பார்ட்னர் வேண்டும் என்பதை தேர்வு செய்தது தஸால்ட் நிறுவனம் தான். இந்த மாற்றத்திற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) தான் காரணம். அவர்கள் தாமதம் செய்ததால் தான், வேறு ஒரு நிறுவனத்தை தஸால்ட் தேர்வு செய்துள்ளது என குற்றம்சாட்டினார். இந்த விசியத்தில் இந்திய விமானப் படையோ, இந்திய அரசோ தலையிடவில்லை. எனவும் கூறினார்.